பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி தரும்படி கேட்ட மனைவி காவ்யாவை அடித்துக்கொன்ற சிவானந்தம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி காவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் வரமகாலட்சுமி பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி கொடுக்கும்படி சிவானந்தத்திடம் காவ்யா கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் காவ்யாவை சிவானந்தம் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சிவானந்தம் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் தாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here