லிப்பிஸ்:
லிப்பிஸ், கம்போங் செத்திக்கில் ஒரு குடியிருப்பாளருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் புலி நடமாட்டம் கிட்டத்தட்ட 500 குடியிருப்பாளர்களுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஓராங் அஸ்லி கம்பத்தில் குடியிருப்பாளர்களின் நடமாட்டம் முடங்கி இருக்கிறது. வேலைக்குச் செல்ல அவர்கள் அஞ்சுகின்றனர்.
இவர்கள் தங்களின் வெளி நடவடிக்கைகளை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளனர்.
சுருங்கச் சொல்லப் போனால் ஒரே ஒரு புலி ஒரு கம்பத்தையே பிணை பிடித்திருக்கிறது.
குடியிருப்பாளர்களில் ஒருவர் காரில் இருந்த வண்ணம் புலியை புகைப்படம் எடுத்ததோடு காணொலியாகவும் பதிவு செய்திருக்கிறார்.
வேலைக்கு செல்வதற்காக வெளியே புறப்படுபவர்கள் புலியை கண்டதும் அப்படியே திரும்பி வீட்டிற்கு ஓட்டம் பிடிக்கின்றனர்.









