‘தி கோட்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ‘தி கோட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன. 2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரெய்லர் 50 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்தநிலையில், தற்போது ‘தி கோட்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here