படுக்கை அறையில் சக மாணவி; குற்றவாளிக் கூண்டில் 15 வயது மாணவன்

கோலாலம்பூர்:

க பள்ளி மாணவியை தன் வீட்டின் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட 15 வயது மூன்றாம் படிவ மாணவன் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலை நிறுத்தப்பட்டான்.

மாஜிஸ்திரேட் நுர்அசிடா எ. ரஹ்மான் Nurasidah A Rahman முன்னிலையில் நிறுத்தப்பட்ட அம்மாணவன் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டதும் குற்றச்சாட்டு புரிவதாக தலையசைத்தான். வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

ரெங்கிட்டில் கடந்த ஜுன் மாதம் இறுதியில் இரவு 9 மணியளவில் 15 வயது சக மாணவியிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

குற்றம் நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை, பிரம்படி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here