ஷா ஆலமில் பெரு வெள்ளத்திற்கு என்ன காரணம்?

கோலாலம்பூர்:

கனத்த மழை, குப்பைகளால் கால்வாய்கள் அடைப்பு ஆகியவையே ஷா ஆலமில் திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்று ஷா ஆலம் டத்தோ பாண்டார் டத்தோ முகமட் பவ்ஸி முகமட் யாத்திம் Datuk Mohd Fauzi Mohd Yatim கூறினார்.

ஆறுகளில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் Seksyen U12 இல் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

மேட்டுப் பாங்கான இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத நீர்ப் பெருக்கால் பாடாங் ஜாவா பகுதிகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின என்று டத்தோ முகமட் பவ்ஸி கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற தரப்பினர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருப்பதோடு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here