மீனவர் சங்கத்தின் மானிய டீசலில் முறைகேடு; ஐவரை கைது செய்தது MACC

கோலாலம்பூர்:

மீனவர் சங்கத்தின் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

அக்கும்பலிடமிருந்து 1.6 மில்லியன் லிட்டர் டீசல் மற்றும் RM3.7 மில்லியன் ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்டதாக MACCயின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு சரவாக், சிபுவிலுள்ள அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

மாலை 4 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், 30 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் சிபுவில் உள்ள MACC கிளை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

சந்தேக நபர்கள் சிபு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 16(b)(B) மற்றும் பிரிவு 18 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 471 மற்றும் விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அசாம் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here