நீரிழிவு நோய்க்கான மாற்று சிகிச்சை குறித்து கவலை கொள்ள தேவையில்லை – சுகாதார அமைச்சர்

ஷா ஆலம்: மனித இன்சுலின் பற்றாக்குறைக்கு மத்தியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளைப் பயன்படுத்துவதை அதிகரிக்கும் அமைச்சகத்தின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி அமாட் வலியுறுத்தியுள்ளார். மாற்று சிகிச்சைகளின் வழி நோயாளியின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சமரசம் செய்யப்படாமல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள் என்று ஸுல்கிப்ளி கூறினார்.

இதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில மருந்துகள் கிடைக்காவிட்டாலும், நோயாளிகள் அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதிப்படுத்த மாற்று வழிகள் வழங்கப்படும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் மருந்து இல்லாமல் வீட்டிற்கு செல்ல மாட்டார்கள். சில மருந்துகளை பரிந்துரைக்க முடியாவிட்டாலும், analogues அல்லது inhibitors போன்ற பிற மாற்று மருந்துகள் நோயாளிகளுக்குக் கிடைக்கும் என்று அவர் தேசிய சுகாதார நிறுவனத்தில் MyGenom திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எந்தவொரு குறிப்பிட்ட சுகாதார வசதியும் இன்சுலின் பற்றாக்குறையை சந்தித்தால், நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுற்றியுள்ள கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பொருட்கள் திரட்டப்படும் என்றும் ஸுல்கிப்ளி கூறினார். மனித இன்சுலின் கூடுதல் விநியோகத்தைப் பெற அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் டிசம்பருக்குள் விரைவான அனுமதிகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மாற்று சிகிச்சைகள் மூலம் மோசமான ஆரோக்கிய விளைவுகள் ஏற்படுவது குறித்து மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) கவலைகளுக்கு ஸுல்கிப்ளி பதிலளித்தார். கர்ப்பிணிப் பெண்கள், டைப் 1 நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் உட்பட சிக்கலான சுகாதார நிலைமைகள் உள்ள நோயாளிகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று MMA தலைவர் டாக்டர் அஜிசன் அப்துல் அஜீஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here