ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தில் 200 கிலோ எடையுள்ள ஆடவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரால் ஆம்புலன்சுக்குச் சுயமாக நடந்து செல்ல முடியவில்லை.
நேற்று புதன்கிழமை (ஜூன் 18) இரவு 10.49 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததை தொடர்ந்து, ஸ்கூடாய் தீயணைப்பு, மீட்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று, ஜோகூர் தீயணைப்புத்துறை தலைவர் சைஃபுல்பாரி சஃபர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 46 வயது ஆடவருக்கு ஆஸ்துமா காரணமாக முச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.




















