கோலாலம்பூர்:
ரவாங், புக்கிட் பெருந்தோங்கில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஓர் ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
வியாழக்கிழமை இரவு 9.33 மணியளவில் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவனுக்கு வயது 36 என்றும் அந்நபர் 16 குற்றப்பதிவுகளைக் கொண்டவன் என்றும் சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்நபர் பயணித்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் போட்ட உத்தரவை மீறி காரைத் தொடர்ந்து செலுத்தியதோடு மட்டும் அன்றி காவல்துறையினரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டதால் அந்நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.