67 வது தேசிய தினக் கொண்டாட்டம்; புத்ராஜெயாவில் பேரரசர் கலந்து சிறப்பிப்பு

புத்ராஜெயா:

இன்று புத்ரா ஜெயா டத்தரானில் நடைபெறும் நாட்டின் 67 வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் நாட்டின் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மகாராணி ராஜா சாரித் சோபியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுல்தான் இப்ராஹிம் முறையே ஜனவரி 31 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் மலேசியாவின் 17வது மாமன்னராகப் பதவியேற்று முடிசூட்டப்பட்ட பிறகு, நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் அவரின் முதல் வருகை இதுவாகும்.

காலை 8 மணிக்கு வந்தடைந்த பேரரசர் தம்பதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு வருகைதந்த மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு மலாய் இராணுவ பிரிவினர் சிறப்பு வரவேற்பினை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து தேசிய தின கொண்டாட்டம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

67வது தேசிய தின கொண்டாட்டத்தில் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தும்விதமாக பத்தாயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here