கோலாலம்பூர்:
சுத்திகரிக்கப்படாத தண்ணீர் விவகாரத்தில் கெடா மாநில அரசாங்கம் எடுக்கும் எந்தவோர் நடவடிக்கைக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் உரிய பதில் அளிக்கும் என்று அதன் முதலமைச்சர் செள கொன் இயோ கூறினார்.
இவ்விகாரத்தில் பினாங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கெடா முடிவு செய்யுமாயின் அதற்கு பதில் அளிப்பதற்கு பினாங்கு தயாராக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
அவர்கள் எப்படி நடந்துக்கொள்கிறார்களோ அந்த வழியில் எங்களது பதில் இருக்கும் என்று கொன் இயோ குறிப்பிட்டார்.
சுத்திகரிக்கப்படாத தண்ணீருக்கு இழப்பீடு பெறுவதற்கு பினாங்கு அரசாங்கத்திற்கு எதிராக கெடா சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மட் சனுசி முகமட் நோர் கூறியிருப்பதற்கு கொன் இயோ இவ்வாறு பதில் அளித்தார்.








