ஷா ஆலம்:
ஷா ஆலம் Section 7 இல் அமைந்துள்ள ஏரியில் முதலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொழுதுபோக்கச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது.
முதலை நடமாட்டம் சில தினங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டதால் ஏரிக்குச் செல்லும் பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு நினைவுறுத்தப்படுவதாக ஃபேஸ்புக் வாயிலாக ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிவித்திருக்கிறது.
நேற்று முதல் அந்த முதலை கண்ணில் படும்படியாக அங்கு உலாவி வருவது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த ஏரிக்கு பொழுதுபோக்கிற்கு வருவோரும் மீன் பிடிக்க வருவோரும் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஏரியில் முதலை உலவும் படத்தோடு அதுபற்றி எச்சரிக்கையை ஏரிக்கு வந்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதை தொடர்ந்து அவ்விவகாரம் தீயெனப் பரவியது.








