கோலாலம்பூர்:
கத்தியைவிட மிகக் கூர்மையான வார்த்தைகளாலும் சொல்லடிகளாலும் சபாவில் உள்ள ஓர் அரசாங்க மருத்துவமனையில் பல டாக்டர்கள் பகடி வதைக்குள்ளாகி இருக்கின்றனர்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். ஆபாச வார்த்தைகளால் அவர்கள் கூனிக் குறுகிப் போகின்றனர்.
நோயாளிகள் முன்னிலையில் நிபுணத்துவ மருத்துவர்களால் தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.
மேல் மட்டத்தில் பல முறை முறையிட்டும் புகார் செய்தும் எவ்வித பயனும் இல்லை என்று அவர்கள் நொந்துக்கொள்கின்றனர்.
அறுவை சிகிச்சை அறையில் குத்திக் காயப்படுத்தும் மிரட்டலும் விடுக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு டாக்டர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார்.