கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறு – 24 வயது இளைஞனை சரமாரியாக வெட்டியவர் கைது

கோலாலம்பூர் கெப்போங்கில் நேற்று கார் நிறுத்துமிடத்தில் கார் மறித்ததால்  ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டார். மாலை 6 மணியளவில் கெப்போங்கில் உள்ள வீட்டுப் பகுதியில் 32 செமீ நீளமுள்ள கத்தியால்  24 வயது இளைஞனை வெட்டிய 28 வயதான சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செந்தூல் காவல்துறைத் தலைவர் அஹ்மத் சுகர்னோ ஜஹாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 35 தையல்கள் போடப்பட்டுள்ளன. சந்தேக நபர் சம்பவ இடத்தில் மாலை 6.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஆபத்தான ஆயுதம் மூலம் கடுமையான காயத்தை தானாக முன்வந்து செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 326ஆவது பிரிவின் கீழ் அவர் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவுகள், வைரலாக பரவி, இரண்டு பேரும் கத்தியால் சரமாரியாக வெட்டப்படுவதற்கு முன்பு வாக்குவாதம் செய்ததைக் காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here