பிலிப்பைன்ஸில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 652 பேர் நேற்று சண்டகன் துறைமுகத்தில் இருந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். ஹரியான் மெட்ரோவின் கூற்றுப்படி, முறையே பாப்பர், சண்டகன், தவாவ் குடிநுழைவு டிப்போக்களில் இருந்து கைதிகள் கடல் வழியாக பிலிப்பைன்ஸில் உள்ள ஜாம்போங்கா நகர துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 469 ஆண்கள், 130 பெண்கள், 12 வயதுக்குட்பட்ட 43 குழந்தைகள் மற்றும் 23 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான வயதுடைய 10 குழந்தைகள் அடங்குவர். சபா குடிவநுழைத் துறை இயக்குநர் டத்தோ எஸ்எச் சித்தி சலேஹா ஹபீப் யூசாஃப் கூறுகையில், இந்த நடவடிக்கையானது 2024 ஆம் ஆண்டிற்கான உசிர் வகையின் 13 ஆவது பரிமாற்றத் திட்டமாகும். இந்த நடவடிக்கைக்காக எம்வி அன்டோனியா 1 கப்பல் பயன்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு இதுவரை, மொத்தம் 3,118 பிலிப்பைன்ஸ் கைதிகள் கடல் மற்றும் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 4,809 ஆக உள்ளது.









