3 பேர் கைது – 16 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் சிக்கியது

கோலாலம்பூர்:

போதைப்பொருள் வினியோகத்தில் ஈடுபட்டிருந்த மூன்று ஆடவர்களை கைது செய்த போலீஸ் கிட்டத்தட்ட 16 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றியது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா கூறினார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் போதைப் பொருள் குற்றப் புலன்விசாரணை இலாகாவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.35 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் தனித் தனி இடங்களில் முற்றுகையிட்டனர்.

செராசில் உள்ள ஒரு கொண்டோமினியத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் 23 முதல் 30 வயதிற்குட்பட்ட மூன்று உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செராஸ் பெர்டானாவில் உள்ள ஒரு கொண்டோமினியத்திலும் அதிரடி சோதனை சோதனை நடத்தப்பட்டது என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here