நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதி -கோபிந்த் சிங்

ஜோர்ஜ் டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் மலேசிய மற்றும் டிஜிட்டல் பினாங்கு உருமாறும் திட்டத்தை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, உரையாற்றினார்

இதன்போது “தென்கிழக்காசியாவில் சுமார் 350 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். இது பொருளாதார வளர்ச்சியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வணிகங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை இது உருவாக்குகிறது” என்றார் அவர் .

இது சம்பந்தமாக, பினாங்குக்கு அப்பால் பிராந்திய இணைப்பை இணைப்பதில் DE-CIX மலேசியாவின் உறுதிப்பாட்டை பாராட்டிய அவர், “2024 இல் மலேசியா மற்றும் தாய்லாந்து எல்லையில் ஒரு புதிய இணைய பரிமாற்றத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் பிராந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் எங்கள் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் ஏற்படும் பல்வேறு வகையான தீங்குகளிலிருந்து குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here