மலாக்காவிலுள்ள தஸ்காவில் எட்டு மாதக் குழந்தை மரணம்; பள்ளிப் பராமரிப்பாளர் கைது

அலோர் காஜா:

தாமான் கெலெமாக் உத்தாமாவில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் (தஸ்கா) எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 34 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டார் என்று, அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்டிண்டன்ட் அஷாரி அபு சாமாஹ் கூறினார்.

முன்னதாக, எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று மயக்கமான நிலையில் அலோர் காஜா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்று அவர் சொன்னார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, நேற்றுக் காலை 7.05 மணியளவில் குழந்தையை அவரது தாயும் தாத்தாவும் நர்சரிக்கு அனுப்பி வைத்தனர், அதற்குள் பாதிக்கப்பட்டவரின் உடல் நீல நிறமாக மாறியுள்ளதாகவும், மூக்கில் ரத்தம் கசிவதாகவும், பாதிக்கப்பட்டவரின் தாய்க்கு நர்சரியில் இருந்து அழைப்பு வந்தது என்றும், பாதிக்கப்பட்டவர் உடனடியாக அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அறிய முடிகிறது.

மேலும் மாலை 6 மணியளவில் குழந்தையின் மரணத்தை மருத்துவர் உறுதிப்படுத்தினார்,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here