டி.ஜே ஞானவேல் தற்பொழுது ரஜினிகாந்த நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் நேற்று வெளியாக்கி ரசிகர்களிடையேம் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஞானவேல் அடுத்ததாக தோச கிங் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் பிரபல சரவணன் பவன் உரிமையாளரான பி ராஜகோபாலின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இயக்கப்படும் கதையாகும்.
இப்படத்தின் கதையை பிரபல கன்னட இயக்குனரான ஹேமந்த் ராவ் படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் இதற்குமுன் பிரபல கவழுடாரி மற்றும் சப்த சாகரடாச்சே எலோ படத்தின் இயக்குனராவார். இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்தும் படப்பிடிப்பு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.