ஜோகூர்:
ஜோகூர் பாரு மேலும் அதன் சுற்றுப்பகுதிகளில் துர்வாடை, காற்று மாசு காரணமாக ஏற்பட்ட தலை சுற்றல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 143 பேருக்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் கூறினார்.
சிகிச்சை பெற்றவர்களில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார் என்ற அவர், பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர் என்றார்.









