டத்தோ ரமணனுக்கு உயரிய டத்தோஸ்ரீ விருது; பகாங் சுல்தான் வழங்கினார்

கோலாலம்பூர்:

மேன்மை தங்கிய பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் பில்லா ஷா அவர்களின் 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு இன்று ‘டத்தோஸ்ரீ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் Darjah Sri Sultan Ahmad Shah Pahang (SSAP) எனும் ‘டத்தோஸ்ரீ’ உயரிய விருது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணனுக்கு வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணை அமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர வணிகர்களின், தொழில்முனைவோரின் மேன்மைக்கு அயராது பாடாற்றி இருக்கிறார்.

இந்த உயரிய விருது அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் என்று இந்திய தொழில் முனைவோர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here