போலீஸ்காரர்களிடம் மனித நேயம் விஞ்சி நிற்கிறது

கோலாலம்பூர்:

டமையில் கண்டிப்புடன் நடந்துக்கொண்டாலும் போலீஸ்காரர்களிடமும் மனித நேயம் மேலோங்கி இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்களின் பரிவு இதனை நிரூபித்திருக்கிறது.

போலீஸையும் மக்களையும் பிரிக்க முடியாது என்பதற்கு சான்றாக இனம் வேறுபாடு பார்க்காது சாமானிய மக்களுக்கு அவர்கள் உதவிகளை நல்கி வருகின்றனர்.

அவ்வகையில் பெட்ரோல் தீர்ந்து போன நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த ஓர் இந்திய சகோதரருக்கு தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு, சமூக பாதுகாப்பு பிரிவை சேர்ந்த கார்ப்பரல் அமிருல் குசாய்ரி அஸ்மி பெட்ரோல் வாங்கி வந்து உதவி இருக்கிறார்.

பீடோர், ஜாலான் ஜெராம் மெங்குவாங்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் வாசிகளின் நலன்களில் போலீசார் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இந்த நற்செயலும் ஒரு சான்றாக திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here