ஜோகூர்பாரு:
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை(செப்.14) குளுவாங்கில் உள்ள துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 1,074 போலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அம்மாநில போலிஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்ப 28ஆம் தேதி நடைபெறவுள்ள குளுவாங், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நாளில் தேர்தல் நிலைமையை கண்காணிக்கவும், பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு சம்பவத்தையும் தடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வார்கள் என்று அவர் சொன்னார்.