கோலாலம்பூர்:
கெடா மன்னர் சுல்தான் சல்ஹுதீன் சுல்தான் பட்லிஷாவின் மூத்த சகோதரி டத்தோ ஸ்ரீ துங்கு சகினா மறைவுக்கு, பிரதமர் தத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
“கெடா டாருல் அமான் மன்னர், யாங்க் தெராமாட் முலியா சுல்தான் சல்ஹுதீன் இப்னி சுல்தான் பட்லிஷா மற்றும் முழு அரச குடும்பத்தினருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாங்க் தெராமாட் முலியா டத்தோ ஸ்ரீ துங்கு சகினா சுல்தான் பட்லிஷா மறைவுக்கு அல்லாஹ் அருள் புரிந்து, மன்னிப்பும் வழங்கி, சாலிஹாக்களுடன் சேர்த்தருள வேண்டும். அல்-பாத்திஹா,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, கெடா அரசவைக் கட்டுப்பாட்டாளர் டத்தோ ஸ்ரீ பாகர் டின் வெளியிட்ட அறிக்கையில், துங்கு சகினா 95 வயதில் இன்று காலை 6.35 மணிக்கு கெடாவில் உள்ள வில்லா ஸ்ரீ துங்குவில் இறந்ததாக கூறினார்.
மேலும் அவரது மையத்து கெடா லங்கார் அரச கொல்லையில் (மயானம்) அடக்கம் செய்யப்பட்டது.



















