கசிந்த எரிபொருளை பிடிக்க சென்ற போது நேர்ந்த துயரம்: 25 பேர் பலி

போர்ட் ஆப் பிரின்ஸ்:

ஹைதியில் டாங்கர் லாரியில் கசிந்த எரிபொருளை பிடிக்க சென்ற போது அது திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

மிராகோனே என்ற நகரில் நடந்த இச்சம்பவத்தில் 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த உடன் பிரதமர் கேரி கோனில், அங்கு சென்று பார்வையிட்டார். பிறகு அவர், இச்சம்பவம் மிக கோரமானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்வோம் எனக்கூறியுள்ளார்.

அந்த டாங்கர், காலை 7 மணியளவில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்த எரிபொருள் கசிந்த போது, திடீரென வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது போன்று அங்கு விபத்துகள் அங்கு அடிக்கடி நடந்து வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here