கோலாலம்பூர்:
கோலாலம்பூர் – ரவாங் 16 ஆவது மைலில் லத்தார் நெடுஞ்சாலை புறவழிக்கு அருகில் ஒரு மரம் கார் மீது சாய்ந்ததில் அதனை ஓட்டி வந்த 38 வயது ஆடவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இன்று மதியம் 1.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரின்டெண்டன்ட் அபாங் கட்ரி அபாங் வல்சு கூறினார்.
ரவாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தில் இருந்து அங்கு விரைந்த வீர்கள் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி காரோட்டியை மீட்டனர். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக அந்த மரம் சாய்ந்தது என்றும் அபாங் கட்ரி சொன்னார்.