கோலாலம்பூர்:
‘அருவருப்பானது’ என்ற ஒற்றை சொல்லில் குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நடவடிக்கைகளை முத்திரைக் குத்தினார் சிஐடி எனப்படும் புக்கிட் அமான் குற்றப்புலன் விசாரணை இலாகா இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸெய்ன்.
புலன்விசாரணையில் தனி முத்திரை பதித்து வரும் இவர், ‘இது ஓர் அருவருக்கத்தக்க செயல்’ என்று ஒற்றை சொல்லில் தமது கருத்தை பதிவு செய்தார்.
ஓப் குளோபல் என்ற அடைமொழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புலன் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் மிகவும் தமக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் பற்றி தகவல் தெரிவிப்பதற்கு கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஷுஹாய்லி முகத்தை சுளித்து பதில் அளித்தார்.