தேசிய திருமுறை விழா: சிலாங்கூர் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றது

பத்துமலை :

லேசிய இந்து சங்கத்தின் தேசியத் திருமுறைப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் சிலாங்கூர் மாநிலப் பேரவை வென்றது. கவியேஷ் வாசு, ஹெமித்ரா ரவிச்சந்திரன், ஷிவாயினி லெட்சுமணன் ஆகியோர் திருமுறை தங்கப் பதக்க வெற்றியாளர்கள்.

பதிகப் பாராயாணத்தை பினாங்கு மாநிலம் வென்றது-வெற்றியாளர் தேசிகன் கணேசன். பஞ்ச புராண தங்கப் பதக்கத்தை பேராக் மாநிலம் தட்டிச் சென்றது-வெற்றியாளர்: ஷரண்யா வாசு. பேச்சுப் போட்டிக்கான பதக்கத்தையும் பேராக் மாநிலப் பேரவையே வென்றது-வெற்றியாளர் சுபநாகஸ்ரீ நாகராஜன் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.

மொத்தத்தில் திருமுறை அடைவு நிலையில், சிலாங்கூர் மாநிலம் முதல் இடத்தையும் பினாங்கு மாநிலம் இரண்டாவது இடத்தையும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் வென்றன.

மலேசிய இந்து சங்கத்தின் 46-ஆவது தேசிய திருமுறை விழா, அண்மையில் பத்துமலையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மலேசிய இந்து சங்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.

மலேசிய இந்து சங்கம் இல்லை என்றால், திருமுறை குறித்தோ சைவ சமயம் குறித்தோ இன்றைய தலைமுறைக்கு தெரியாமலேயே போயிருக்கும்.

இத்தகையப் பணிகளை மலேசிய இந்து சங்கம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், மலேசிய இந்துக்கள் அனைவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மலேசிய இந்து மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், திருமுறை ஓதுவதன் மூலம், தமிழ் அறியாதவர்களையும் தமிழைக் கற்கவைக்கும் அரும்பணியையும் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.

ருக்குன் நெகாரா கோட்பாட்டின் முதல் கொள்கையான இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பதை, இளம் பருவத்திலிருந்தே ஊட்டி, இறை நம்பிக்கையுடன் நன்னெறியையும் கற்பித்து நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்கிவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு சமுதாயமும் அரசாங்கமும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here