கோலாலம்பூர்:
பேங்க் ராக்யாட் வங்கி தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தைப்பிங் ஏரி பூங்காவில் நூரி விளையாட்டு பூங்காவை திறந்து வைத்தது பேங்க் ராக்யாட் வங்கி நிர்வாகம்.

பேங்க் ராக்யாட்டின் சமூக கடப்பாட்டு அங்கங்களில் ஒன்றாக இந்த விளையாட்டு பூங்கா திறந்து வைக்கப்படுவதாக அதன் விளம்பர தொடர்பு பிரிவு தலைமை அதிகாரி நிஸாம் சானி தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு கெடா, கூலிமில் முதல் நூரி விளையாட்டு பூங்காவை பேங்க் ராக்யாட் திறந்து வைத்தது. அதனை அடுத்து இது இரண்டாவது பூங்காவாகும் என்றார் அவர்.

மழைக் காலங்களிலும் பாதுகாப்பான வகையில் சிறுவர்கள் விளையாடக் கூடிய வகையில் இந்த நூரி விளையாட்டு பூங்கா வடிவமைக்க பட்டிருக்கிறது என்பது அதன் சிறப்பு என்று அந்த பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையில் நிஸாம் குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு விழாவை முன்னிட்டு ஊடகவியாளர்களு டன் பல சிறப்பு நிகழ்ச்சிகளை பேங்க் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்தது.தமிழ் ஊடக பிரிவில் மக்கள் ஓசை ஊடகத்திற்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த வகையில் கோலாலம்பூர் கே. எல். சென்ட்ரலில் இருந்து ஊடகவியலாளர்கள் ரயில் மூலம் தைப்பிங் மாநகரம் சென்றடைந்தனர். தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.








