கேமரன் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஜாலான் பெசார் பிரிஞ்சாங்கில் விழுந்த மண், மரங்கள் மற்றும் மின்கம்பங்களால் தடை ஏற்பட்டுள்ளது. கேமரன் ஹைலேண்ட்ஸ் காவல்துறைத் தலைவர் அஸ்ரி ரம்லி, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
அக்ரோ மார்க்கெட் அருகே உள்ள ஜாலான் பெசார் பிரிஞ்சாங்கின் 76ஆவது கிலோ மீட்டரில் நடந்த நிலச்சரிவு பற்றி காலை 11 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக ஒரு அறிக்கையில் அஸ்ரி கூறினார். மாலை 4 மணிக்குள் இரு வழிச்சாலையையும் பொதுப்பணித்துறை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.