கோலாலம்பூர்:
யுனிடென் எனப்படும் யுனிவர்சிட்டி தெனாகா நேஷனல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற கவினன் சுப்ரமணியம் சைக்கிளில் மசாலா டீ விற்று மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் சம்பாதிக்கிறார்.
நம்ப முடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
கோவிட்-19 தொற்று பரவல் இவரது வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது.
கொஞ்சமும் கூச்சப்படாமல் ஒரு சைக்கிளை எடுத்தார். கோலாலம்பூரின் மையப் பகுதியில் உள்ள பிரிக்ஃபில்ட்ஸ் வந்து மசாலை தேநீர் விற்பனையை தொடங்கினார் இந்த டீ தம்பி.
இந்த மசாலை டீ அனைத்து இன மக்களிடையே பிரபலமடைந்தது. நாள் ஒன்றுக்கு 100 கிளாஸ் என்ற அளவில் தொடங்கிய விற்பனை இப்போது 2,000 முதல் 3,000 கிளாஸ் வரை விற்பனை ஆகிறது.
சிகாம்புட்டில் ஒரு சமையல் அறையை திறந்து அங்கு 17 பேர் உதவிக்கு இருக்கின்றனர்.
இந்த மசாலை டீயின் விலை 1 ரிங்கிட்டில் தொடங்கி 4 ரிங்கிட் வரை விற்பனை ஆகிறது. கவி செராசை சேர்ந்தவர்.








