PERKESO- ‘Lindung 24 Jam’ திட்டம்: ஒரே மாதத்தில் 3 மடங்கு அதிகரித்த விபத்து இழப்பீட்டுக் கோரிக்கைகள்!

கோலாலம்பூர்:

சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO அறிமுகப்படுத்திய ‘Lindung 24 Jam’ திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இழப்பீடு கோரியவர்களின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்து, முந்தைய மாதத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம், தொழிலாளர்கள் பணிபுரியும் நேரத்தைத் தாண்டி, வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட வேளையில் நேரிடும் விபத்துகளுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்குவதை முதன்மை நோக்கக் கொண்டுள்ளது.

ஜூலை 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை வெறும் 5 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் 2,508 பேருக்கு RM3.45 மில்லியன் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி மருத்துவச் செலவுகள், மறுவாழ்வு உபகரணங்கள், மருத்துவப் பொருத்துதல்கள் மற்றும் தற்காலிக வேலை செய்ய இயலாமைக்கான நிவாரணம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயனாளிக்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தில் இணைவது தன்னார்வ அடிப்படையிலானது (Voluntary basis) என்ற போதிலும், சமீபகாலமாகப் பணியிடத்திற்கு வெளியே நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்ய இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும் என PERKESO கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here