ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 26 வயது ஆடவர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்றுக்காலை (செப்டம்பர் 25) காலை 5.41 மணிக்கு உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் சைஃபுலிசாம் முகமட் தெரிவித்தார்.
“அந்த ஆடவர், 10 மீட்டர் ஆழமுடைய கடற்பரப்பில் விழுந்தார் என்றும், அவரின் உடலை மீட்க தீயணைப்பு வீரர்களில் ஒருவர் மீட்புக் கயிற்றைப் பயன்படுத்தினார் என்றும் “அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு கூறியது,” என்றும் சைஃபுலிசாம் கூறினார்.