டெல்லியில் பிரமாண்ட மாளிகையை வாங்கியிருக்கும் சோனம் கபூர்- அதன் பெறுமதி எத்தனை கோடி தெரியுமா?

பாலிவூட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர்.இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, மேலும் தனுஷுடன் இணைந்து அம்பிகாபதி என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்திருந்தார்.இவர் பிரபல  நடிகர் அனில் கபூரின் மகளாவார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் ‘சாவரியா’ படம் மூலம் பாலிவூட்டில் அறிமுகமாகினார்.இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னரும் சோனம் கபூர் பல படங்களில் நடித்து வருகின்றார்.  சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தாலும் டெல்லியில் ரூ.173 கோடியில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார்.பிருத்திவிராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த மாளிகையானது 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here