GISBH: சிறார்களின் உள்ளங்கையில் பிரம்பால் அடித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிள்ளான்:

சிறார்களை துன்புறுத்தியதற்காக கிள்ளான் GISBH சமுக இல்ல பராமரிப்பாளருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தன்னுடைய பாதுகாப்பில் விடப்பட்ட 10 முதல் 12 வயதிற்குட்பட்ட மூன்று ஆண் சிறார்களுக்கு உடல் ரீதியாக காயம் விளைவித்ததை ஒப்புக்கொண்ட 23 வயது முகம்மட் பாரூர் ரஹிமுக்கு நீதிபதி நொரிடா அடாம்10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

குப்பை போட்டதற்காக பிரம்பால் அந்த சிறார்களின் வலது உள்ளங்கையில் அடித்ததாக சுமத்தப்பட்ட குற்றசாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கிள்ளான் உத்தாரா, புக்கிட் ராஜாவில் உள்ள அல்-மஹாபா சமுக நலன், கல்வி நிறுவனத்தில் 2024, ஜுலை மாதம் இக்குற்றச் செயலை புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here