கூலாயில் தெருவிளக்கு மீது மோதிய கார்; ஆடவர் மரணம்

கூலாய் :

ங்குள்ள ஜாலான் ஜோகூர் பாரு-ஆயிர் ஈத்தாமின் 27 ஆவது கிலோமீட்டரில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தெருவிளக்கு மீது மோதியதில் 44 வயது நபர் நேற்று உயிரிழந்தார்.

விபத்தின் தாக்கத்தால் வாகனம் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

குறித்த சம்பவத்தை உறுதி செய்த கூலாய் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் டான் செங் லீ, இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றார்.

மேலும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் இன்ஸ்பெக்டர் அமாட் சஃபுவான் அபு நைமை 017-7573507 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here