ரவாங் பார்க்கிங் திட்டம்; அலட்சியம் காரணமாக KTMBக்கு RM2.4 மில்லியன் இழப்பு

கோலாலம்பூர்:

வாங் KTMB ரயில் நிலையத்திற்கு அருகே கட்டப்பட்டுவந்த பல அடுக்குமாடி வாகன தரிப்பிட கட்டுமானத் திட்டத்தில், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால்  ரயில் தண்டவாளப்பகுதியில் கிரேன் விழுந்ததில் KTMB நிறுவனத்துக்கு RM2.4 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 12 அன்று நடந்தது.

ரவாங் மற்றும் குவாங் இடையினான தண்டவாள பகுதியில் 355.749 ஆவது கிலோமீட்டரில் கிரேன் சரிந்ததால், அப்பாதை சேதமடைந்தது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவைகளை பாதித்தது, மேலும் இதனால் 20,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, KTMB இன் செயல்பாட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் செய்தது தொடர்பில் குறித்து JKR க்கு KTMBநிறுவனம் வேலை நிறுத்த எச்சரிக்கையை வழங்கியது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் பணியிடத்தின் பாதுகாப்பை செய்ய தவறியதே இந்த விபத்துக்கு காரணம் என விசாரணையின் மூலம் கண்டறிந்ததாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். 

விசாரணை முடியும் வரை குறித்த ஒப்பந்ததாரரின் அனுமதி தற்காலிகமாக தடை விதித்ததாக லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here