மக்கோத்தா இடைத்தேர்தல்: 8 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பம்

குளுவாங்:

க்கோத்தா மாநில இடைத்தேர்தலுக்கான 20 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

இன்றைய வாக்குப்பதிவில் 61,274 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த வாக்களிப்பு இன்று மாலை 6 மணிக்கு முடிவடையும் என்றும், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் செயல்முறை இங்குள்ள துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை எதிர்வுகூறல் அடிப்படையில், இன்று காலை குளுவாங்கில் நல்ல வானிலை நிலவும் என்று கணித்துள்ளது, ஆனால் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று அது தெரிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சைட் ஹுசைன் சைட் அப்துல்லா மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமட் ஹைசான் ஜாபர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here