மலாக்கா:
அலோர் காஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 121 குடும்பங்களைச் சேர்ந்த 407 பேராக இருந்த நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி 61 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேராக குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது அம்மாவட்டத்தில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் (PA) கமருல்ஸ்யா முஸ்லிம் தெரிவித்தார்.
மேலும் இன்று காலை வானிலை தெளிவாக காணப்படுவதாகவும், எந்த முக்கிய வீதிகளும் மூடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









