பேங்க் ராக்யாட்டின் 2% சிறப்பு லாப ஈவு

பேங்க் ராக்யாட்டின் 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 28 முதல் சிறப்பு லாப ஈவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 56.6 மில்லியன் ரிங்கிட் வங்கியின் 784,487 வாடிக்கையாளர்களுக்கு லாப ஈவு வழங்கப்படுகிறது என்று பேங்க் ராக்யாட்டின் ஓர் அறிக்கை தெரிவித்தது.

மலேசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய நிதி நிறுவனமாகவும் இஸ்லாமிய கூட்டுறவு வங்கியாகவும் விளங்கிடும் பேங்க் ராக்யாட் சமூக நிதி வளத்தில் சிறந்த பங்காற்றி வருகிறது.

அதே வேளையில் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு லாப ஈவை வழங்கும் கடப்பாட்டையும் பேங்க் ராக்யாட் செவ்வனே நிறைவேற்றி வருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு சிறந்த வளர்ச்சி நிலையையும் தொடர்ந்து நிலையான ஆக்கப்பூர்வ தன்மையையும் கொண்டு வணிகம், நீண்ட கால அடிப்படையிலான புதிய அணுகுமுறையின் வழி இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.

டிஜிட்டல் உருமாற்றத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள், உறுப்பினர்களின் வணிக நடவடிக்கைகளில் நீண்ட கால அடிப்படையிலான மதிப்பீட்டு முறை ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது.

இந்த லாப ஈவானது உறுப்பினர்களின் உபரி வருமானமாக மட்டும் அமைந்திருக்கவில்லை மாறாக வைப்பு தொகை, முதலீடு, தினசரி செலவீனம் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நிதி இலக்கை அடையவும் இது உதவி செய்கிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here