ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யும் சாம்சுங் நிறுவனம்

சோல்:

தென்கிழக்காசியாவிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் ‘சாம்சுங் இலெக்டிரானிக்ஸ்’ (Samsung Electronics) நிறுவனம் அதன் ஊழியர்களை ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மொத்த ஊழியரணியில் சுமார் 10 விழுக்காட்டினரைப் பாதிக்கக்கூடும். வெளிநாடுகளில் உள்ள துணை நிறுவனங்கள் சிலவற்றில் ஆட்குறைப்பு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

தென்கொரிய நிறுவனமான ‘சாம்சுங்’, வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 147,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. மிக அண்மைய நீடித்த நிலைத்தன்மை அறிக்கையின்படி, நிறுவனத்தின் மொத்த ஊழியரணியான 267,800ல் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் என்று அறியப்படுகிறது.

இதற்கிடையே, அதன் சொந்த நாட்டில் எவ்வித ஆட்குறைப்பும் சாம்சுங் செய்யத் திட்டமில்லை என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here