இஸ்லாமாபாத்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் பயணமாக பாகிஸ்தான் சென்றடைந்தார்.
பிரதமர் பயணித்த விமானம் மலேசிய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கியது.
பாகிஸ்தான் சென்றடைந்த பிரதமரை அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வர்த்தக அமைச்சர் ஜமால் கமால் கான், திப்பு சுல்தானின் நெறிமுறைத் தலைவர், மலேசியாவுக்கான தூதர் சையத் அஹ்சன் ரசா ஷா ஆகியோர் வரவேற்றனர்.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசன், பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் முகமட் அசார் மஸ்லான் ஆகியோரும் இப்பயணத்தில் இணைந்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








