பண்டமாரன், கிள்ளானில் ஆயுதமேந்திய முகமூடி கொள்ளையர் குழு அராஜகம்; 6 இலட்சம் வெள்ளி இழப்பு

ஷா ஆலம்:

ண்டமாரன், கிள்ளானில் ஆயுதமேந்திய கொள்ளையர் குழு வீட்டிற்குள் நுழைந்தபோது ஒரு இந்தியக் குடும்பம் பயங்கரமான இரவை அனுபவித்தது.

ஜாலான் ஜகோங்கில் நேற்று காலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது, ​​முகமூடி அணிந்த 12 சந்தேக நபர்கள் இரண்டு கார்களில் குறித்த மூன்று மாடி பங்களாவின் முன்புறம் வந்து, சுவரில் ஏறி, பிரதான கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படும் சந்தேக நபர்கள், வீட்டை சூறையாடுவதற்கு முன்பு, அவ்வீட்டில் இருந்த மூவரையும் கட்டிப்போட்டுவிட்டு, பணம், தெய்வச் சிலைகள் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகவும் , அதனால் அவர்களுக்கு RM600,000 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

“கொள்ளைச் சம்பவம் தொடர்பில், ​​காலை 6.16 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறிய அவர், சந்தேக நபர்கள் அனைவரும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் தப்பிச் சென்றனர்,” என்றார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டில் வசிக்கும் ஒருவரான 37 வயதுடைய நபருக்கு இடது தோளில் பாராங் கத்தியால் வெட்டப்பட்டு காயம் ஏற்பட்டதாக ACP சா கூறினார்.

சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 03-3376 2222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 395 மற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here