மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி

ஸ்ரீ அலாம்:

ஜாலான் ஜோகூர் பாரு-கோத்தா திங்கியின் சாலையின் 10 ஆவது கிலோ மீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் தில் 72 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று (பிப்ரவரி 12) பிற்பகல் 3.15 மணிக்கு பிக்கப் லோரியை ஓட்டி வந்த 63 வயது ஓட்டுநர், திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

தலைநகரை நோக்கிச் செல்லும் நடுப் பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட முதியவர், பிக்கப் லோரியின் பின்னால் சென்று கொண்டிருந்ததால், சரியான நேரத்தில் நிறுத்த முடியாமல் லோரியின் பின்புறத்தில் மோதினார்.

இந்த மோதலில் குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இடது பாதையில் விழுந்தார், அங்கு இன்னொரு லோரி அவரை மோதியது, பின் பாதிக்கப்பட்டவர் லோரியால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார் என்றும், இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் ,” சோஹைமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here