E-Invoice உங்கள் வணிகத்தின் புதிய உருமாற்றம் இப்போதே E-Invoice க்கு மாறுங்கள்

பி.ஆர். ராஜன்

1 ஆகஸ்டு 2024- ஆண்டுக்கு நூறு மில்லியன் ரிங்கிட்டிற்கு அதிகமான வருமானம் அல்லது விற்பனை அளவைக் கொண்டிருக்கும் வரி செலுத்துவோர் இத்தேதியில் இருந்து இ-இன்வொய்ஸ் (E-Invoice) முறையைப் பயன்படுத்த வேண்டும்.

1 ஜனவரி 2025- ஆண்டுக்கு 25 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வரையிலான வருமானம் ஈட்டும் அல்லது விற்பனை அளவைக் கொண்டிருக்கும் வரி செலுத்துவோர் இத்தேதியிலிருந்து இ-இன்வொய்ஸ் முறைக்கு மாற வேண்டும்.

1 ஜூலை 2025- அனைத்து வகை வரி செலுத்துவோரும் இந்தத் தேதியிலிருந்து இ-இன்வொய்ஸ்க்கு மாற வேண்டும்.

விற்பனையாளர் – வாங்குவோர் இடையிலான பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையை இ-இன்வொய்ஸ் கொண்டிருக்கும். இ-இன்வொய்ஸ் பயன்பாட்டின் வழி காகித ஆவணங்கள், PDF, JPEG, DOC போன்ற வழக்கமான மின்னியல் பயன்பாடுகள் இனிமேல் இருக்காது.

இ-இன்வொய்ஸ் விற்பனையாளர் – வாங்குவோர், பொருட்களின் விவரங்கள், அளவு, வரி இல்லாத விலை, வரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பரிவர்த்தனை ஆகியவை அடங்கிய முக்கிய விவரங்களை முழுமையாகக் கொண்டிருக்கும் பாரம்பரிய நடைமுறையில் இருந்த அனைத்து விவரங்களும் இ-இன்வொய்ஸ்சில் இடம் பெற்றிருக்கும்.

இ-இன்வொய்ஸ் அமலாக்கம் என்பது உண்மையான நேரத்தில் (real time) சரிபார்த்து பரிவர்த்தனைகளை வைத்திருப்பதற்கு வகை செய்கிறது. ஓட்டுமொத்தப் பார்வை


பாரம்பரிய நடைமுறையில் இருந்து இ-இன்வொய்ஸ்க்கு எளிதான முறையில் மாறுவதற்கு வரி செலுத்துவோர் HASIL எனப்படும் மலேசிய உள்நாட்டு வருமான வாரியத்திற்கு இ-இன்வொய்ஸ் அனுப்புவதற்கு மிகப் பொருத்தமான வழிமுறைகளைத் தேர்வு செய்யலாம். இ-இன்வொய்ஸ் அனுப்பும் நோக்கத்திற்கு HASIL இரண்டு வகையான வழிமுறைகளைத் தயார் செய்திருக்கிறது. வணிகத்தின் தேவை அடிப்படையில் பொருத்தமான வழிமுறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

1. Portal Mylnvois
* LHDNM இதனை உருவாக்கியிருக்கிறது
* கட்டணம் ஏதுமின்றி வரி செலுத்துவோர் இலவசமாக இதனைப் பயன்படுத்தலாம். * Application Programming Interface (API) இணைப்பு தயாராகாத நிலையில் இ-இன்வொய்ஸ் வெளியிடுவதற்கு வரி செலுத்துவோர் Portal MyInvois இணைப்பைப் பயன்படுத்தலாம்.

2. Application Programming Interface (API)
* வரி செலுத்தும் சிஸ்டம் மேலும் மை இன்வொய்ஸ் (Sistem MyInvois) இடையில் தரவுகளை நேரடியாக அனுப்பும் ஒரு செட் கோட் (Code) முறைதான் API. நடப்பில் இருக்கும் சிஸ்டத்தில் ஒருங்கிணைப்பதற்கு
* தொழில்நுட்பத்தில் தொடக்க முதலீடு தேவை
* மிகப்பெரிய வணிக பரிவர்த்தனை அல்லது பெரும் தொகையில் வரி செலுத்துவதற்கு API முறை மிகவும் பொருத்தமாகும்.

* சொந்த சிஸ்டத்தைக்கொண்டிருக்கும் நிறுவனங்கள் Integrasi.Application Programming Interface (API) முறையைப் பயன்படுத்தலாம்.

* https://mylax.hasil.gov.my என்ற அகப்பக்கத்தில் இருந்து Portal MyInvois போர்ட்டலை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இ-இன்வொய்ஸ் அமலாக்கம், போர்ட்டல்) மைஇன்வொய்ஸ் தொடர்பில் மேலதிகத் தகவல் பெற விரும்புவோர் கீழ்க்குறிப்பிட்டவற்றில் பெறலாம்.

* 03-86828000 என்ற எண்ணில் இ-இனவொய்ஸ் முகப்பிடத்தை அழைக்கலாம் (24 மணி நேரம்)
Mylnvois Live Chat
இ-இன்வொய்ஸ் பற்றிய பொதுத்தகவல் பெறுவதற்கு [email protected] எனும் மின் அஞ்சல்
* மைஇன்வொய்ஸ் வாடிக்கையாளர் கருத்துச் சொல்லும் பாரங்களை https:// feedback.myinvois.hasil.gov.my அகப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here