இந்து சமய கருத்தரங்கமும் இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்கோவில்களுக்கும் வழங்கும் விழா நாளை 2.3.24 சனிக்கிழமை காலை 9 மணி தொடங்கி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் ஸ்தாபகர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார்.
முனைவர் சந்திரிகா சுப்பிரமணியத்தின் தொடக்கவுரையுடன், டான்ஶ்ரீ க.குமரனின் சிறப்புரையுடன் மேலும் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், பேராசிரியர் முனைவர் திலகவதி, டத்தோ டாக்டர் கதிரேசன், முனைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி, சுப்பிரமணி சோனையா உள்ளிட்ட ஆன்றோர் சான்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.























