சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 277 பேர் இன்னும் அங்குள்ள 3 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

ஷா ஆலம்:

ன்று மதியம் 2.28 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 277 பேர் இன்னும் கோலா சிலாங்கூரிலுள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் போர்ட்டலின்படி, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 146 பேர் தங்கியுள்ளனர்.

அதேநேரம் கோம்பாக்கில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“பாதிக்கப்பட்டவர்களில் 103 ஆண்கள், 96 பெண்கள், 40 சிறுவர்கள், 29 சிறுமிகள், நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் ஐந்து பெண் குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்” என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here