அலோர் ஸ்டார்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122 குடும்பங்களைச் சேர்ந்த 439 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு இந்த எண்ணிக்கை 89 குடும்பங்களைச் சேர்ந்த 305 பேராக இருந்தது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் அப்பகுதியிலுள்ள ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.