குழந்தை நட்சத்திரம் டூ தேசிய விருது வெற்றியாளர்.. ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி செம happy..

70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான தேசிய விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பெற்றார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் பெற்றார்.

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். இவர் அஞ்சலி திரைப்படத்தில் முக்கிய குழந்தை நடத்திரமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் செய்தியாளரை சந்தித்தபோது கூறியது ” ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக 4 விருது வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here