இனி புதன்கிழமைதோறும் நாடாளுமன்றத்தில் சீனி பயனீட்டிற்குத் தடை விதிக்கப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை அமலாக்கும் பொருட்டுநாடாளுமன்றத்தில் புதன்கிழமைதோறும் சீனிக்குத் தடை இனி புதன்கிழமைதோறும் நாடாளுமன்றத்தில் சீனி பயனீட்டிற்குத் தடை விதிக்கப்படும்.
ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை அமலாக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தோறும் இந்தப் புதிய விதிமுறை இந்த வாரம் முதல் பின்பற்றப்படும் என்று மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பணியாளர்கள் மட்டும் இந்த அமலாக்கத்தில் உட்படுத்த படவில்லை மாறாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உட்படுத்த பட்டிருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த நடைமுறை கட்டாயமாக்க படுவதாக இன்று அவர் தெரிவித்தார்.